Thursday, 25 October 2012

உயிருடன் இருக்கும் போது மக்களுக்கு தானம் செய்து பார்,


       உயிருடன் இருக்கும் போது மக்களுக்கு தானம் செய்து பார்
ஒருவன் மிகுந்த செல்வம் கொண்ட பெரிய பணக்காரன். அவன் தன் இறப்பிற்குப் பின் தன் சொத்துக்கள் அனைத்தையும் தர்மம் செய்வதாக இருப்பதை அனைவரும் தெரிந்தும், அவனை மக்கள் குறை கூறிக் கொண்டே இருந்தார்கள். அதனால் மிகவும் மனமுடைந்த அவன், அதற்கான காரணத்தை அறிய ஒரு ஜென் துறவியை பார்க்கச் சென்றான்.
துறவியைப் பார்த்து அனைத்தையும் கூறி, "எதற்கு?" என்று கேட்டான். அதற்கு குரு அவனிடம் "உனக்கு பன்றி மற்றும் பசுவைப் பற்றி சொல்ல வேண்டும்" என்றார். அதற்கு அவன் "அது என்ன பன்றி, பசு கதை, எனக்கு சொல்லுங்கள்" என்று கூறினான்.

பின் குரு "ஒரு முறை பன்றி பசுவிடம், நீ மக்களுக்கு பால் மட்டும் தான் தருகிறாய், ஆனால் நான் அவர்களுக்கு என் மாமிசத்தையே தருகிறேன். இருப்பினும் மக்கள் உன்னையே புகழக் காரணம் என்ன? என்று வருதத்தோடு கேட்டது. அதற்கு பசு நான் உயிருடன் இருந்து அவர்களுக்கு தருகிறேன், நீ இறந்து தருகிறாய், அதனால் எதையும் உன்னால் உணர முடியவில்லை என்று சொன்னது." என்று கதையை கூறினார்.
பிறகு குரு அவனிடம் "நீயும் அந்த பன்றியைப் போல் தான், உயிருடன் இருக்கும் போது மக்களுக்கு தானம் செய்து பார், பின் தெரியும்" என்று கூறி மடத்தின் உள்ளே சென்றார்.

ஒரு நாள் ஜென் துறவி தன் நண்பரிடம் பேசிக் கொண்டே, காட்டு வழியாக நடந்து கொண்டிருந்தார். அப்போது நடந்து செல்லும் போது, ஒரு மரத்தில் தேன் கூடு இருந்தது. அந்த தேன் கூட்டிலிருந்து தேனை இரண்டு பேர் எடுத்துக் கொண்டிருந்தனர். அதைப் பார்த்ததும் துறவின் நண்பர் துறவியிடம் "தேனீ தன் கடின உழைப்பினால் தேனை சேகரித்து வருகிறது. ஆனால் அதை மனிதர்களான நாம் திருடிவிடுகிறோமே, அதற்காக அது எவ்வளவு வருத்தப்படும்" என்று கூறினார்.

No comments:

Post a Comment