Friday, 11 August 2017

*வாழ்க்கை"

*வாழ்க்கை"








மிகவும்  வயதான   சாகும்  தருவாயில்   இருந்த  ஒரு
சந்நியாசி  தன்  சீடர்களுக்கு  வாழ்க்கைத்  தத்துவம்  என்ன
என்பதை  விளக்க  நினைத்தார்.. எல்லோரையும்  அழைத்து,
தன்  பொக்கை வாயைத்   திறந்து  காண்பித்தார்.




அவ்வளவு தான்..


 *இதுதான்  வாழ்ககைத் தத்துவம்*  என்று
கூறி  அனுப்பி விட்டார்..  சீடர்களுக்கு  ஒன்றும்  புரியவில்லை.





ஒரேயொரு  சீடன்  மட்டும்  அப்படியென்ன  வாழ்க்கைத்
தத்துவம்  "பொக்கை  வாய்க்குள்" என நினைத்து,  அதனை
தைரியமாக   குருவிடமே  கேட்டார்.



குரு  கூறினார்..:  என்  வாய்க்குள்  என்ன
இருந்தது?


நாக்கும்,  உள் நாக்கும்
இருந்தது.


பல்  இருந்ததா?


இல்லை.


*அது தான்  வாழ்க்கை*


*வன்மையானது  அழியும்* *மென்மையானது  வாழும்*"

Know soft, know life

No soft, no life.

 வாழ்க  வளமுடன்!!!

No comments:

Post a Comment