“”ஆந்திராவில் புயல்… அதனால் பாதிக்கப்பட்டவர்கள் அநேகம் பேர். அதற்காகப் புயல் நிவாரண நிதி தமிழ்நாட்டில் திரட்டப்படுகிறது.
கல்லூரி மாணவர்கள் கையில் உண்டியலுடன் நிதி திரட்டினார்கள்.
சிவகாசி பக்கத்தில் ஒரு பேருந்து நிலையம். மாணவர்கள் உண்டியலை நீட்டுகிறார்கள். மக்கள் காசு போடுகிறார்கள்.
அங்கே பிச்சையெடுத்துக் கொண்டிருந்த ஒருத்தர், “என்ன விஷயம்?’ என்று விசாரித்தார்.
“ஆந்திராவில் வீடிழந்தவர்களுக்கு வீடு கட்டிக் கொடுக்கவும், பசியால் வாடுகிறவர்களுக்கு சாப்பாடு போடவும், ஆடை இல்லாதவர்களுக்கு ஆடை கொடுக்கவும் இந்தப் பணம் உதவும்’ என்று சொன்னார்கள்.
அந்தப் பிச்சைக்காரர் யோசித் தார். “கொஞ்சம் இருங்க’ என்று சொல்லிவிட்டு தமது பழைய துணியைப் பிரித்தார். தம்மிடம் அதுவரை சேர்ந்திருந்த அவ்வளவு காசையும் மாணவர்களிடம் கொட்டிவிட்டுத் திரும்பிக்கூட பார்க்காமல் அவர் பாட்டுக்கு நடந்து போனார்.
இது சில ஆண்டுகளுக்கு முன்னால் பத்திரிகைகளில் வந்த ஓர் உண்மைச் செய்தி.”
No comments:
Post a Comment