Friday, 8 March 2013

வாழ்வின் தலைசிறந்த தத்துவம்




”இருப்பதை வைத்துக் கொண்டு இல்லாததைப் பயன் படுத்து!’ 

சீன ஞானி லாவோட்சு சொல்லியிருக்கிற இந்த தத்துவம் என்னை யோசிக்க வைத்தது.

களிமண்ணால் பானை செய்கிறோம். பால் பொங்குவது வெற்றிடத்தில். 

பானை உடைந்தால் சோறு பொங்க முடியாது. ஆகவே பானை தேவை.

 “இருக்கிற பானையை வைத்துக் கொண்டு இல்லாத வெற்றிடத்தைப் பயன் படுத்து’ என்கிறார் அந்த ஞானி.

கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.


 கதவு, ஜன்னல் வைத்து வீடு கட்டினாலும் நாம் வாழ்வது உள்ளே இருக்கிற வெற்றிடத்தில்தான்! 

இன்னும் சொல்லப்போனால் கடவுள் என்பதே ஆற்றல் மிகுந்த ஒரு வெற்றுத் தன்மைதான்!”

No comments:

Post a Comment